இடுகைகள்

சிறப்புடைய இடுகை

வேடுபறி

படம்
சாமி ரூமில் இருந்த tape Recorder - இல் ராஜாஜி பேசி முடித்து இருந்தார். கணீர் குரலில் " பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே" என்று M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரல் காதில் விழுந்ததும் கையில் இருந்த ரிமோட்டில் volume பித்தானை அழுத்தினேன். அந்த Tape ரெகார்டர் இருந்த ஷெல்ப்பின்  கீழ் தான் எங்கள் வீட்டில் சுவாமி  படங்கள் மாட்டி இருக்கும். இடது முதல் வலமாக, செந்தூர் பாலசுப்ரமணியர் , சரஸ்வதி லட்சுமி நடுவே விநாயகர் , ஓர் தனி விநாயகர் , அதற்க்கு கீழ் ராமர் பட்டாபிஷேகம் , மாங்காடு அம்மன் , ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர் , சரஸ்வதி , காமாக்ஷி , புவனேஸ்வரி படங்களும் , சில விக்கிரகங்களும் இருக்கும்.   அந்த ரூமில் ஒரு நான்கு கற்களை தவிர ,  வெள்ளை மொசைக் கல்லால் flooring அமைக்கப்பட்டிருக்கும். சுவாமிக்கு முன் போடப்பட்டிருந்த சிக்கு கோலங்கள்   கருப்பு மொசைக் கற்களில் நன்கு தெரிந்தன .   அதன் மேல் கிண்ணத்தில் பால்  இருந்தது.  வலது ஓரமாய் இருந்த வெள்ளி விளக்கில் காலையில் விட்ட எண்ணையில் தோய்ந்து இருந்த   திரியை  நிமிண்டி    விட்டு தீப்பெட்டியில் " பட் " என குச்ச

அழகி

ஷேர் ஆட்டோ திருவான்மியூர் RTO   சிக்னலில்  நின்றவுடன் இறங்கவேண்டும் என்று தான் தோன்றியது. பரவாயில்லை டிப்போவில் நிறுத்தவும் என்று ஓட்டுனரிடம் சொன்னேன். வாகனமும் வெடிப்பற புகையை பின்னே கக்கிய படி சிக்னலை தாண்டி சென்றது. அலுவலில் இருந்து சீக்கிரமாக கிளம்பி O.M.R சாலையில் நடந்து  சோளிங்கநல்லூரில் இருந்து தான் ஆட்டோவை பிடித்து ஏறினேன். அன்று அந்த ஓட்டுநர் தர்மத்துக்கு தான் ஓட்டினார் என்று சொல்ல வேண்டும். ஆட்டோவில் நானும் இன்னொருவரும் தான் இருந்தோம். அன்று அவர் பெரிதாக ஒன்றும் பயணியரை ஏற்ற முற்படவில்லை. தானே சிரித்த படி இருந்தார். தனக்குள்ளேயே பேசிக் கொண்டு இருந்தார். பாடவும் செய்தார். அவர் ஸ்டிரியோவில் ஒலிக்க செய்தவை பண்பலையோ , சாதாரண mP3 சிடியோ இல்லை என்று தான் தோன்றியது. தேர்ந்தெடுத்த பாடல்களாக தான் ஆட்டோவில் கேட்டுக் கொண்டு இருந்தார். "ஆகாய கங்கை " ஒலித்தது. "தாலாட்டுதே வானம் " கேட்டது. "அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா" என்பதும் கேட்டதாய் ஞாபகம்.  நான் ஷேர்  ஆட்டோவை விட்டு இறங்கிய போது "ஓ வசந்த ராஜா" என்ற பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. டிப்போவ

ராமதூதம்

  1. ராமன் பட்டாசாரியார் தாடியை மழித்து ஒரு மூன்று வாரங்கள் ஆகிறது. அவரை எப்போது பார்த்தாலும் நன்கு தாடியை மழித்து தலை முடியில் டை அடித்து  வகுடு  எடுத்து வாரி நெற்றியில்  தென்கலையார் திருநாமமும்  ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு பிரசன்ன வதனமாக இருப்பார். கோவிலுக்கு வருபவர்கள் ஸ்ரீனிவாச பெருமாளை சேவிப்பதா  இல்லை  பட்டாச்சாரியாரை சேவிப்பதா  என்ற குழப்பம் வருமென்றால் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். அவர் தாடியை மழிக்காமல் சோகத்தில் இருக்கிறார் என்பதற்கு  பல காரணம் சொல்லப்படுகிறது. அவர் மகன் இன்ஜினியரிங் படித்து விட்டு சென்னைக்கு வேலை பார்க்க சென்று இரண்டு மாதங்கள் ஆகிறது. வீட்டில் ஓடித் திரியும்  ஸ்ரீலக்ஷ்மியும்  சமஸ்கிருதத்தில்  M. A படிக்க சென்னையில் ஒரு புகழ் பெற்ற காலேஜுக்கு சென்று மூன்று மாதமாகிறது. முதல் வாரம் வந்த போது இருந்தது நான்காவது வாரம் வந்தபோது ரகுநந்தனின் தலையில் காணோம். அவன் உச்சி தலையில் இருந்து நீண்டு வளர்ந்திருந்த பின் சிகையை கிராப் பண்ணிவிட்டதாக சொன்னது கூட இருக்கும். காலையில்  பெருமாள் திருமஞ்சனத்துக்கும் நைவேத்யத்துக்கும் பால் தரும் மதுஸ்ரீயை பராமரிப்பதற்கு ஆளில்லா

பித்து

I அவன் சொன்ன வாசகத்தில் இருந்து " ஆரோஹணம்.... சிங்கம்.... அலங்காரம்.... திரிசூலம்.... " என்பது தான் என் மனதில் நின்றது. இதை வைத்து தான் அந்த பிம்பத்தை அமைக்க வேண்டும் என்று உத்தேசித்தேன். தூரிகையை முக்கியும் அமிழ்த்தியும் பார்த்து விட்டேன். வந்து அமரவில்லை. வீட்டு முற்றத்தில் முன்தினம் பெய்த  கடும் மழை தேங்கி இருந்தது. உடன் வந்திருந்த கண்ணன் இருந்த சுதேசமித்திரனை எடுத்து திண்ணைக்கு போய்விட்டார்.  எதிரில் இருந்த  காரை சுவரில் இருந்த பிறையின் கீழ் தான் அவன் அமர்ந்திருந்தான்.  கோட்டும் பஞ்சகச்சமும் உடுத்தி,  ஒரு காலை குத்திட்டு,  அதில் கையை ஊன்றி தலையில் முண்டாசுடன் வீர பாண்டிய மீசையும் தாடியுமாய்  கண் மூடி இருந்தான். பக்கத்தில் இருந்த தாம்பாளத்தில் இருந்து அவன் தாம்பூலத்தை தரித்து இருந்ததை பார்க்கும் போது கண்ணன் சொன்னது தான் ஞாபகம் வந்தது. "ஆர்யா.... இவன்  முன்ன மாதிரி கிடையாது. இப்போதெல்லாம் சிவமூலிகை பழக்கம் எல்லாம் ஆரம்பிச்சாசு".  அந்த பிம்பத்தையே  வரைந்து காட்டிவிடலாமா என்று கூட யோசனை வந்தது. திருவல்லிக்கேணியில் இருந்து ரயில்  வண்டியில் ஏறி பாண்டிச்சேரிக

ஓம் சாந்தி

படம்
பாண்டிச்சேரியில் நான் கழித்த நாட்களில் வெகுவாக சென்ற இடம் என்றால்  கடற்கரையும் கோயில்களும். மகாத்மா காந்தி சாலையின் துவக்கத்தில் இருக்கும்  ரயில்வே நிலையத்தின்  எதிரில் இருக்கும் கௌசிக பாலசுப்ரமணியர் கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. முருகப் பெருமானும், வாசலில் இருக்கும் துவார பாலகர்களும் இன்னும் என் கண்ணில் இருந்து  மறையாத ரூபங்கள் . அதை தாண்டி புஸி வீதியை கடந்து ஏழை பிள்ளையார்  கோவிலை அனுதினமும் என் பள்ளி நாட்களில் ஆட்டோக்களிலும், கால்மிதி வண்டியிலும் செல்கையில் தொந்தி கனம் பொருந்திய இரு கணங்கள் ராட்சச பலா பழத்தையும், வாழைப்பழ கொலைதனையும் தலையில் தாங்கி இருப்பதற்கு பின் ஒரு சிறிய பீடத்தின் மேல் சின்ன  கணபதி நர்த்தனம் புரிந்த படி இருக்கும் சிற்பத்தையும்  மறக்க முடியாது. நான் ஏழை பிள்ளையார் கோயிலுக்கு  முதன் முதலில் செல்ல ஆரம்பித்தது  என் பத்தாம் வகுப்பு public எக்ஸாம் போது தான் . எங்கள் வீட்டில் என் படிப்பறிவிற்கு ஈடாக தெய்வ கடாத்ஷத்திலும் நம்பிக்கை வைத்து இருந்ததால், ஒவ்வொரு நாளும் ஏழை பிள்ளையாரை பிரார்த்தித்து தேர்வுக்கு செல்ல என்னை பணித்திருந்தனர். ஈஸ்வர தர்மராஜர் தெருவில் எ

மதுபானசேரி

I  எங்கள் ஊரில் பெரிய முடிதிருத்த சலூன்கள் புல்வார்டிலும், கடை வீதியிலும் இருப்பவை. அங்கெல்லாம் ஒரு முடி திருத்தத்துக்கு 25 ரூபாய் என்று கேள்விப்பட்டு வாய் திறந்து நின்ற காலமெல்லாம் உண்டு. நான் முடிதிருத்தம் செய்யும் இடம் பஸ் ஸ்டாண்ட் முன் இருக்கும் சலூன்களில் தான். அங்கே இருக்கும் முடிதிருத்துவோர் அநேகமாக கண்டமங்கலம், திருபுவனை, பாகூர், நெட்டப்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து வந்திருப்பர். ஆனால் என் கையிலும் 25 ரூபாய் இருக்கும். முடிதிருத்ததுக்கு ஓர் ஐந்தாண்டு இடைவெளியில் பத்து ரூபாயில் இருந்து பன்னண்டுக்கு தாவி பதினைந்து வரை கொடுத்ததாய் எனக்கு ஞாபகம் உள்ளது. மீதம் பத்து ருபாய் செலவு  பங்க் கடைகளில் தான்.  ஓரமாய் ஒரு பருத்த சணலின் கயிறு நீளம் முனையில் இருக்கும் கங்கினால் குறைந்துக் கொண்டு இருக்க, வெளியே தினமலர், தினத்தந்தி, மாலை மலர் wall  பேப்பர்  தொங்கவிட பட்டிருக்கும் . மேலே ஒரு கயிறில் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், சினிமா எக்ஸ்பிரஸ் , தமிழன் எக்ஸ்பிரஸ், நக்கீரன், ராணி பத்திரிக்கைகளுக்கு அடுத்து, அரைகுறை கேலி சித்திரங்களை முன் பக்க அட்டையில் கொண்டு இருக்கும்  துக்ளக் பத்

படைப்பூக்கம் எனும் பேய்...

படம்
சமீபத்தில் பழைய காகிதங்களை புரட்டிக் கொண்டு இருக்கையில் கண்ணில் பட்டது. நான் ரசித்த ஆளுமைகள். புறந்தள்ள மனமில்லை.  இருந்த கைபேசியில் "சக் ... சக்...."  என்ற போட்டோ எடுத்ததின் விளைவு.

ஆதங்கமும் எதிர் வினைகளும்

சில விஷயங்களை பார்த்தாலோ, படித்தாலோ, கேட்டாலோ அப்படியே மனதில் அறவுணர்ச்சி எல்லாம் பொங்கி வழியும். ஏதாவது செய்ய வேண்டும் . சாய்க்க வேண்டும் என்று தோன்றும். புரட்சிப்புயல் மனதில் வீசும். இலட்சியவாதியை போல் மேடையில் பேசுவதாய் சில வீர வசனங்கள் மனதில் வரும். மண்டையில் ஓடும். அந்த நாள் அப்படியே வீணாகும். "அச்சச்சோ ?" என்று நேரம் போனது தான் மிச்சம் என்பது உறைக்கும் போது  மனக்குகையில் எழுந்த சிறுத்தையின் தலையை தட்டி அடக்க நேரிடும். எனக்கு அப்படி தான் இருந்தது   பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையை படிக்கும் போது. நான் ஒரு முறை சென்னையில் யாருடனோ காரில் பயணித்துக் கொண்டு இருந்தேன். கார் ஒரு தெருவில் போய் நின்றது . காரை ஓட்டி வந்தவர் தெலுங்கர். இன்னொரு தமிழ் நண்பரையும் கூட அழைத்து வந்திருந்தார்.  இருட்டாக இருந்ததால் வழியில் ஒரு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு நின்றவரை சரியாக பார்க்க முடியவில்லை. சற்று பருமனான ஆள் என்று மட்டும் தெரிந்தது. ஏனோ நான் வெளியிலேயே நிற்க, இருவரும் அவருடன் ஒரு பெரிய அப்பார்ட்மெண்டுக்குள் சென்று வந்தனர். அட்வான்ஸ், தண்ணீர் பில், எலெக்ட்ரிக் பில் பற்றி பேச்சு தொடங்க